Author: சாய்ராம் சிவகுமார்
-
பள்ளிக்கூட மணி
இலைகளின் சலசலப்பு போல சில பேச்சரவம். மற்றப்படி நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல பேரமைதி.
-
பெல்ட்
பெல்ட் உயரும் போது அது நரியின் வால். தயாராகும் போது அது பயந்து உறைந்து அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும் பாம்பு.
-
அழுகையின் இசை
சற்று முன்பு பெய்த மழையின் பளபளப்பில் ஓர் இரயில் நிலையம். ஈரத் தரை விரிந்து கிடந்த பிளாட்பார்மில் சோகமுடன் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண்.
-
கவிஞன் ஒருவன்
உலகில் இது வரை இப்படியொரு கவிஞன் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை என மொழி வாழும் காலம் வரை தன் பெயர் நிலைக்க வேண்டுமென விரும்பினான்.
-
இந்தக் கணம்
இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது. வழியும் சிகரெட் புகை உடலில் எங்கோ கீதமிசைக்கிறது. இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன நரம்புகள். சூடாய் இறங்கும் தேனீர் பானம் உடலிற்குள் இளம் மழையின் அரவணைப்பு.
-
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்
மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி…
-
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி
அது ஹிப்பிகளின் பொற்காலம். ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.
-
அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்
தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.
-
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை
அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.
-
லிங்கம்
ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான் எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.