369 வருடங்களுக்கு முன்பு 1639-ம் ஆண்டு மதராஸ்பட்டினம் என்கிற இடத்தில் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான உரிமையும் நிலமும் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கபட்டது. இந்த சம்பவமே இன்றைய சென்னை நகரம் உருவாக காரணமாக அமைந்தது என சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளான இன்று (22 ஆகஸ்ட்) மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒப்பந்தத்தில் மெட்ராஸ்பட்டினம் என்று இருந்தாலும், இன்றைக்கு மெட்ராஸ் மாநகரத்தை நாம் சென்னை என அரசு வழிகாட்டுதல்படி அழைக்கிறோம். அப்படியானால் இன்றைய தினம் மெட்ராஸ் தினம் என்று அழைக்கபட வேண்டுமா? சென்னை தினம் என்று அழைக்கபட வேண்டுமா? 369 வயதாகும் சென்னை அதற்கு முன்னரே பல்லவர் காலத்தில் துறைமுகமாக புகழ் பெற்றிருந்தது. மைலாப்பூர், திருவல்லிகேணி ஆகிய பகுதிகள் குமாஸ்தாக்களின் வருகைக்கு முன்னரே ஊர்களாக வளர்ந்திருந்தன. என்றாலும் ஆங்கிலேயரே இன்றைய சென்னைக்கு தொடக்கம் கொடுத்தார்கள் என நாம் நினைப்பது நியாயமா? சரி அப்படியே கருதி விழா எடுத்தாலும் போர்ச்சீகிய பெயரான மெட்ராஸ் பொருந்துமா? தெலுங்கு பெயரான சென்னை பொருந்துமா?
Leave a Reply