நீரை உலர்த்த காத்திருக்கும் வெயில்
பாலைவனத்தின் நடுவே
முளைத்து எழுந்து
தலைக் குனிந்து நிற்கிறது
குடிநீர் குழாய் ஒன்று.
குழாயிலிருந்து துளிர்த்து நிற்கும்
நீர் சொட்டு ஒன்று
பல்கி
சூரிய ஒளியில் பிரகாசித்து
கீழே விழ காத்திருக்கிறது.
மணல்வெளியில்
நீர் விழும் தருணத்தில்
அதனை உலர்த்த காத்திருக்கிறது
வெயில்… ...தொடர்ந்து வாசிக்க ...