ஓரினமாதல்
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
மரத்தின் மீது எறிந்துச் சென்ற
கருநீல நெடிய வயர் ஒன்று
மரத்தோடுப் பிணைந்து
தண்டோடுச் சுற்றி
பட்டைகளோடுக் கலந்து
பழுப்பாகி போனது.
இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
அந்த வயரினுள் இருந்து
முளைத்தது
ஓர் இலை… ...தொடர்ந்து வாசிக்க ...
தேநீர் மாயம்
பரபரப்பான நகர தெருவில்
அழுக்கான டீக்கடையில்
பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர்
நரம்பினுள் செலுத்துகிறது
அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும்
அம்மலையின் சக்தியையும். ...தொடர்ந்து வாசிக்க ...