Year: 2011

  • சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

    என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன்.

  • இருளில் ஒரு வெளிச்சம்

    இருளிலே இருளோடு இருளாய் இருந்தான். அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.

  • இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள் கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள் மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள் களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும், துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

  • சென்னை மக்கள் சிக்னலை மதிப்பதே இல்லையே! ஏன்?

    அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது.

  • பொம்மை கடையில் ஒரு பதினைந்து நிமிடம்

    “வாக்கி டாக்கி வந்தா சொல்லுங்க. பையன் ஆசைபடறான்.” அந்த அம்மாள் அழுது விடுவாள் போலிருந்தது. அந்த இரு குண்டு மனிதர்களுக்கு இடையில் ஓர் ஏழு வயது மதிக்கதக்க சிறுவன் நின்றிருப்பதை அப்போது தான் கவனித்தேன். அழுது அழுது முகம் சிவந்திருந்தது.

  • பயம் உருவமாகும் போது

    இந்தக் கணம். இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

  • கை மீது மட்டும் பெய்யும் மழை

    அதிசயம் தான். சடசடவென பெய்யும் மழையில் உடல் எங்கும் உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம். கைகளில் மட்டுமே நீர். எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.

  • பாபநாசம்

    நெரிசல் மிகுந்த டீக்கடையோரம் கால்களை பார்த்தவாறு ஒரு மூலையில் அமர்ந்து பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.

  • பத்திரிக்கை அட்டை எப்படி இயற்றப்பட வேண்டும்?

    ஆறு வித்தியாசங்களை சொல்லுங்கள்!

  • அவளை முத்தமிடுவது போல என்னையும்

    என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை. இமை மூடுவதும் இல்லை. அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.