Month: October 2011

  • 700 கோடி மக்கள்தொகை ஒரு பொய்

    சமீப பத்தாண்டுகளில் உலகத்தின் பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முழுமையாக நடந்தேறவே இல்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் தான் இன்றைய நிலவரப்படி மிக வேகமாக மக்கள்தொகை அதிகரித்தபடி இருக்கிறது. இங்கு கடந்த இருபதாண்டுகளில் முழுமையான ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவே இல்லை. இந்த சூழலில் மக்கள் தொகை 700 கோடியாக உயரும் என்பது ஓர் எதிர்பார்ப்பு அவ்வளவு தான். இன்னும் சொல்ல போனால் ஒரு யூகம் என்பதை…

  • உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

    அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு.

  • பரமக்குடி, பள்ளிக்கூடம், வாகனத்தை கண்டாலே பயந்து ஓடும் கிராம மக்கள்

    பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி…

  • உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

    அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான்…