sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » 2010 » April

பழிக்கு பழி!

April 27, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது.
நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு. ...தொடர்ந்து வாசிக்க ...

ஐபிஎல் – ஆல் அவுட்!

April 17, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும். ...தொடர்ந்து வாசிக்க ...

எந்திரத்தினுள் அவர்கள்

April 13, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும்.
நேரம் கடந்து விட்டது.
காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும்
நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது. ...தொடர்ந்து வாசிக்க ...

எதற்காக பதிவிட வேண்டும்? அவசியமா?

April 12, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

வலைப்பதிவர்கள் தனி மனித தேடல் கொண்டவர்களாய், தன்னுள்ளே தேடுபவர்களாய் இருக்கிறார்கள். அதோடு அவர்களது எழுத்து அவர்களால் மட்டுமே தணிக்கை செய்யபடுகிறது. (உள் மனதின் தணிக்கை வேறு எந்த சர்வதிகார சென்சார் மீடியாவை விட கடுமையானது.) என்றாலும் வலைப்பதிவில் எழுதபடுவதை மற்ற ஊடகங்களில் உள்ளது போல வேறொரு கை எடிட் செய்வதில்லை. எழுதி முடித்தவுடனே பதித்து விட முடிகிறது. இதன் காரணமாய் மனித மனத்தின் யதார்த்தம் வேறு எங்கும் வெளியில் தெரிவதை விட வலைப்பதிவுகளில் அதிகமாய் தெரிகிறது. மனித மனதை நாம் rawஆக இவ்வளவு அருகில் இருந்து பார்த்தில்லை என்பதே நமக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு காரணம். இவ்வளவு rawஆக எழுதுவதற்கு காரணமென்ன? அப்படி எதற்கு வலைப்பதிவிட வேண்டும்? அவசியமா? ...தொடர்ந்து வாசிக்க ...

தமிழ் வலைப்பதிவுலகம்

April 12, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில்… ...தொடர்ந்து வாசிக்க ...

அவன் கைதான மறுநாள்

April 6, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

எங்களுக்கு கல்வி வேண்டாம்

April 3, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

எங்களுக்கு கல்வி வேண்டாம்.
எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
குழந்தைகளை தனியாக விடுங்கள்.
ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.

...தொடர்ந்து வாசிக்க ...

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.