Month: August 2008

 • மெட்ராஸ் தினமா? சென்னை தினமா?

  369 வருடங்களுக்கு முன்பு 1639-ம் ஆண்டு மதராஸ்பட்டினம் என்கிற இடத்தில் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான உரிமையும் நிலமும் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கபட்டது. இந்த சம்பவமே இன்றைய சென்னை நகரம் உருவாக காரணமாக அமைந்தது என சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளான இன்று (22 ஆகஸ்ட்) மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒப்பந்தத்தில் மெட்ராஸ்பட்டினம் என்று இருந்தாலும், இன்றைக்கு மெட்ராஸ் மாநகரத்தை நாம் சென்னை என அரசு வழிகாட்டுதல்படி அழைக்கிறோம். அப்படியானால் இன்றைய தினம் மெட்ராஸ்…

 • நீங்கள் எழுதும் வலைப்பதிவின் நோக்கம் என்ன?

  தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர்…

 • எழுத்தாளனை துரத்தும் மரண பயம்

  என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை. கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.

 • முதல்வர் பதவிக்காக சிரஞ்சீவி நடத்தும் பிரம்மாண்ட யாகம்

  கடந்த ஞாயிற்று கிழமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். சில மாதங்களாகவே ஆந்திராவில் எதிர்பார்க்கபட்ட விஷயம் என்றாலும், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலிலே முதலமைச்சர் ஆகுமளவு அவரது புகழ் இல்லையென்றாலும் தேர்தல் முடிவுகளில் அவரால் ஓரளவு தாக்கத்தை உண்டு செய்ய இயலும் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. சிரஞ்சீவி எதற்காக அரசியலில் பிரவேசிக்கிறார்? மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் அரசியலில் நுழைவதாக சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம்…

 • வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?

  வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?

  அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும்.

 • 2 குழந்தைகள் – ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!

  இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன.ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம்.

 • சுதந்திர நாட்டின் மனிதர்கள்

  “இவன் இருக்கானே, பள்ளிக்கூடத்துல இருந்து பாதியில ஓடி வந்துட்டான். வயல்ல அப்பா கூட வேலை செய்யுடான்னா முடியாதுன்னு சொல்லிட்டு தறுதலையா திரியறான். சிகரெட், தண்ணீ எல்லாம் பழக்கமும் உண்டு. நம்ம ஊர்ல தான் தெரியுமே இராத்திரியாச்சுன்னா வயசானவங்கள்ல இருந்து எட்டாவது படிக்கிற பொடிசுங்க வரை அத்தனை ஆம்பிள்ளைகளும் சாராய கடை பக்கம் தான் நிப்பாங்க. இவங்க அம்மா பொறுத்து பொறுத்து பாத்துட்டு விட்டுட்டா. இப்பல்லாம் வீட்டுலயே ஃபிரெண்ட்ஸோட சாராயம் குடிக்கிறான்.”

 • நகராமல் நிற்கிறது காலம்

  எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும் யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!

 • நினைவலைகள்

  மேல் மூட்டையை பிரிக்கவும் கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்