Tag: இதழியியல்

  • பத்திரிக்கை அட்டை எப்படி இயற்றப்பட வேண்டும்?

    ஆறு வித்தியாசங்களை சொல்லுங்கள்!

  • மனிதர்கள் – பாலைநிலத்து நிருபர்கள்

    எதோ கேங்க் லீடர் போல ஊரிலிருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சூழ தான் உதவி ஆசிரியர் இருப்பார். நிறுவன வேறுபாட்டின்றி அந்த ஊரில் இருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது கட்டுபாட்டில் தான் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எந்த மன கசப்பும் இல்லாமல் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரே ஊரில் வசிக்கும் சொந்தக்காரர்கள் ஒருவருக்கொருவர் உரிமையோடு பேசி கொள்வது போலவும், ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அறிந்து வைத்திருப்பது போலவும் நிருபர்கள் குழு பழகியதை பார்த்தேன்.

  • தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?

    நிருபர், செய்தி ஆசிரியர், ஊடக நிறுவன உரிமையாளர் எல்லாருக்கும் ‘ஒரு செய்தி’ (பிரபலமாக வேண்டிய ஒரு செய்தி) மிக அவசியமாக மிக அவசரமாக எப்போதும் தேவைப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. யானை பசிக்கு தீனியை உருவாக்கி கொண்டே இருக்கிற கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் கிடைக்கும் செய்தியை உடனே பெரிது செய்யவும் முடியாது. அதற்கு பல கட்டுபாடுகள்/புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் உண்டு.