ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.
…நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது. லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை. அரசாங்கம் அங்கு நடப்பதை வெளியுலகம் அறிய முடியாதபடி செய்து இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி வெளி வந்த சில தகவல்களை பாருங்கள். (நாஜிகளின்) முகாம் என அதற்கு பெயரிடுவது தான் பொருத்தமாக இருக்கும். இவை எல்லாம் பொய் என்றால் இலங்கை அரசு எதற்கு மீடியாவை முகாம்களுக்கு போக அனுமதி மறுக்கிறது…
…இந்திய மக்கள் பல்வேறுபட்ட பின்புலங்களை உடையவர்கள். இங்குள்ள ஊடகங்கள் இலங்கையில் என்ன நடந்தது என்பதை கவனமாய் தவிர்த்து விட்டன.… …மேலும் வாசிக்க









