Tag: மனித உரிமை மீறல்

  • அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில் இருந்த 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட ஆண்களை எல்லாம் மொத்தமாய் ஓரிடத்தில் கைது செய்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தவர்கள் அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.

    அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்னும் சில நேரத்தில் இடமே மக்கள் நெருக்கடியால் வெடித்து விடும் என்பது போல இருக்கிறது. சூரியன் பகல் பொழுதில் கொளுத்துகிறது. உணவோ குடிப்பதற்கு நீரோ இல்லை.… …மேலும் வாசிக்க


  • “காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு. நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.

    “இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான். அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.

    தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்

    இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட.

    இடைதேர்தல் வரை காத்திருந்து இந்தச் செயலைச் செய்திருக்கும் அரசு கூடவே கோடி ரூபாய் செலவில் அங்குள்ள மக்களுக்கு நலபணி திட்டம் அறிவித்து எலும்பு துண்டினை எறிந்து இருக்கிறது. மக்களைப் பற்றி அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கும் மக்கள் எலும்பு துண்டுகளைக் கவ்வி கொண்டு நிற்கும் நாய்கள் போல தெரிவார்கள் போல.

    மாற்று கருத்தினை எதிர்கொள்ள துளியும் இஷ்டமின்றி, அடக்குமுறைகளை ஏவி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர துடிக்கும் அதிகாரம் கண்டனத்திற்குரியது.


  • ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பெரும் விவாதத்தினை உண்டு செய்திருக்கிறது. இச்சூழலில் சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் இலங்கைக்கு எதிரான வாதத்திற்கு வலு சேர்த்தன. இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்பான ஆம்னிஸ்டி தற்போது இலங்கையில் இன்னும் அரசு உதவியோடு தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிராக தொடரும் கைது, கடத்தல், துன்புறுத்தல், கொலைகள் பற்றி 63 பக்க ‘locked away’ என்கிற ரிப்போர்ட்டினை வெளியிட்டு இருக்கிறது.

    “விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் இன்றும் தீவிரவாத தடுப்பு சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் எந்தவித சாட்சியமும் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும், நீண்ட காலத்திற்கு அவர் மீது வழக்கு பதியாமலே காவலில் வைத்திருக்க முடியும். தீவிரவாத அமைப்பினர் என்று அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் கூட இந்த வகையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவன் அந்த டாங்கியைப் பார்த்து எதோ சொல்கிறான் என புரிந்து கொள்ள முடிகிறது. அவனது செயலைக் கண்டு பீரங்கி டாங்கி குழம்பி போய் சற்று நேரம் நின்று பிறகு மீண்டும் அவனைத் தவிர்த்து சற்று திரும்பி தன் வழியில் செல்ல எத்தனிக்கிறது. ஆனால் அந்த இளைஞனோ மீண்டும் மீண்டும் அந்த மிருகத்திற்கு முன்னால் போய் நிற்கிறான்.… …மேலும் வாசிக்க


  • இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு தடை விதித்தது. வெறும் customs act-இல் தடை செய்யபட்டது மட்டுமே இந்த புத்தகம். இப்போது சல்மான் ருஷ்டி ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வருவது யாருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை, வழக்கமாய் அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை காட்டியே இந்த முறை அவரை வரவிடாமல் செய்து விட்டார்கள்.… …மேலும் வாசிக்க


  • சமீபத்தில் நண்பர் சந்தானமூர்த்தி மூலமாக அ.மார்க்ஸ் மற்றும் 17 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் பரமக்குடி வன்முறை தொடர்பான அறிக்கை வாசிக்க கிடைத்தது. துப்பாக்கிச்சூடு மாதிரியான அதீத நடவடிக்கைக்கு முன் தயாரிப்போடு தான் காவல்துறையினர் சம்பவத்தன்று வந்திருந்தார்கள் என குற்றம் சாட்டுகிறது அறிக்கை. சாதிய மனநிலை எப்படியெல்லாம் எல்லா மட்டங்களிலும் ஊடூருவி இருக்கிறது என்பதையும் அது தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறி இயக்கத்தை எப்படி உருவாக்குகிறது என்பதையும் இந்த அறிக்கையை வாசித்தால் புரிந்து கொள்ளலாம் … மேலும் முழு அறிக்கையை வாசிக்க

    அந்த அறிக்கையின் மைய நோக்கத்தை தவிர்த்த வேறு இரண்டு விஷயங்கள் எதோ என் கவனத்தை ஈர்த்து கொண்டே இருந்தன.

    பள்ளிக்கூடங்களில் சாதி

    மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர்.

    …மேலும் வாசிக்க

  • பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. உயிர்பலி வேதனைக்குரியது. இச்சம்பவத்தில் சாதி மனநிலை மிகுந்து இருப்பதை மறைக்கவே முடியாது.

    துப்பாக்கி சூட்டை ஆதரித்து பேசிய முதல்வர் தொடங்கி, மருத்துவமனையில் போய் அட்மிட் ஆன போலீஸ் உயர் அதிகாரிகள், வருட வருடம் விழாவிற்கான அனுமதி/உதவி ஆகியவற்றை சரியான சமயத்தில் தர மறுத்து, சம்பந்தபட்டவர்கள் கோர்ட் படியேற காரணமான அரசு அதிகாரிகள், விழாவில் கலவரம் வரும் என எதிர்பார்த்து அப்படி வந்தால் ஆக்ரோஷமாய் செயல்பட வேண்டுமென தீர்மானித்த அதிரடிப்படை தலைவர்கள், துப்பாக்கி சூடு நிகழ்த்திய போலீஸ்காரர்கள், பிணத்தை எதோ விறகுகளை சுமந்து செல்வது போல தூக்கி கொண்டு வந்த காவலர்கள், இவனுங்க விழாவுல அப்படி ஆட்டம் போடுவானுங்க அதனால் தான் சுட்டிருப்பானுங்க என டீக்கடையோரம் பேசும் நபர்கள் என சாதி மனநிலை என்பது எங்கோ ஆழத்தில் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அது கட்டுபடுத்த முடியாமல் வக்கிரத்துடன் பல இடங்களிலும் வெளிபடவும் செய்கிறது என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • wikileaks2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள்.

    2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்கு பயணப்பட்டார். வன்னியில் போர்முனையில் நடந்த மனித உரிமை மீறல் செயல்களை பற்றிய கவலைகளை தெரிவிக்க நடந்த பயணம் என்று சொல்லபட்டாலும் இந்த பயணத்தின் போது முகர்ஜி விடுதலைப்புலிகளுக்கான எதிரான போரினை நிறுத்தும்படி கோரவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

    “போர் வெற்றி 23 ஆண்டுக்கால பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதோடு இலங்கை முழுவதும் குறிப்பாக வட இலங்கைக்கும் புதிய அரசியல் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் என நான் நம்பிக்கை தெரிவித்தேன். ராஜபக்சே தன்னுடைய நோக்கமும் அது தான் என்று உறுதியளித்தார்,” என்று முகர்ஜி சொன்னதாக விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள் சொல்கின்றன.… …மேலும் வாசிக்க


  • சாதி என்னும் சுவர்

    உத்தபுரத்தில் தலித் மக்கள் தாங்கள் வசிக்குமிடம் அருகே வரக்கூடாது என சாதி இந்துகள் சுவர் எழுப்பி அதன் மேலே மின்சாரம் பாயும் கம்பிகளையும் வைத்தது 21-ம் நூற்றாண்டின் உச்சகட்ட அவலம். (சுட்டி: ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்) இந்த சுவரை இடித்த அரசாங்கம் கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட சாதி இந்துகளுக்கும் தலித் மக்களுக்கும் தனி தனி பள்ளிக்கூடம், தனி ரேஷன் கடை என புது தீண்டாமை பழக்கத்தினை உருவாக்கியது. காவல்துறையினரே தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து (கலவரத்தினை அடக்க என சொல்கிறார்கள்) டீவி, சாமான்கள் எல்லாம் உடைத்தார்கள். கலவரத்திற்கு காரணமானவர்கள் என கைது செய்யபட்டவர்களில் அப்போது பிரசவம் முடிந்து மூன்று நாளே ஆன ஒரு பெண், எழுபது வயது முதிய பெண் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். (சுட்டி: உத்தபுரமும் காம்ரேடுகளும்)

    மற்றொரு உத்தபுரம்

    கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது.… …மேலும் வாசிக்க