அது ஹிப்பிகளின் பொற்காலம். கடற்கரையெங்கும் இளைஞர்கள் நிரம்பி இருக்கிறார்கள். பலருக்கு நீளமான தலைமுடி, தாடி. பெண்களோ எளிமையான உடையில். வெயில் மஞ்சளாய் மாறி கொண்டிருக்கிறது. கஞ்சா வாசனை எங்கும் அடிக்கிறது. மேடையில் இசை விழா அரங்கேறி கொண்டிருக்கிறது. ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. போதைக் கண்ணிற்கு ஏற ஹிப்பிகள் இசையின் உலகிற்குத் தன்னை அர்ப்பணித்து கிடந்தார்கள். திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.
புகைப்படத்தின் உயிர்
20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படக்காரர் டென்னிஸ் ஸ்டாக். இரண்டாம் உலகப் போர் காரணமாக பள்ளி படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ராணுவத்தில் இணைந்தார்.… …மேலும் வாசிக்க






