அந்தக் குடும்பத்திற்கு அது ஒரு விசேஷ சந்திப்பு. கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், தம்பதியரின் தாய் தந்தையர் என எல்லாரும் மதிய விருந்திற்காக குழமியிருந்தார்கள். வெளியே மதிய வெயில் பழுக்க தொடங்கியிருந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாய் மதிய விருந்து தொடங்கியது. என்ன விசேஷம்? அந்தக் கணவன் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது தான் விசேஷம். இரண்டாம் உலகப் போரிலே ராணுவ வீரராய் பணியாற்றி விட்டு போர் முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறார் அவர். பெயர் வெயின் மில்லர். வயது 27.
இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பியிருப்பது மட்டும் விசேஷமல்ல, அந்தப் போரிலே வெயின் மில்லர் எடுத்த புகைப்படங்கள் பெரும் புகழைப் பெற்று விட்டன. டாக்டரான அவருடைய தந்தைக்கு அது குறித்து பெருமை தான். மகன் பள்ளி படிப்பு முடித்தவுடன் பரிசாக புகைப்பட கருவியை அவனுக்கு அளித்து அவனுள் புகைப்பட ஆர்வத்தை உண்டாக்கியவரே அவர் தான். மில்லரின் தாய் நர்ஸாக பணியாற்றியவர். தன் ஐரிஷ் பின்புலத்தைக் குறித்து பெருமைக் கொண்டவர்.… …மேலும் வாசிக்க









