இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு தடை விதித்தது. வெறும் customs act-இல் தடை செய்யபட்டது மட்டுமே இந்த புத்தகம். இப்போது சல்மான் ருஷ்டி ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வருவது யாருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை, வழக்கமாய் அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை காட்டியே இந்த முறை அவரை வரவிடாமல் செய்து விட்டார்கள்.… …மேலும் வாசிக்க
Month: January 2012
-
-
யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை
முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம்.நினைக்கும் போதெல்லாம்
உடலினுள் பரவுகின்றன
உணர்வலைகள்.
முகங்கள்
ஏனோ நினைவில் இல்லை.
வலை வீசி தேடினால்
சிக்குவது
உருக்குலைந்து போன ஓவியங்களே.என் முகமும்
மறந்து போயிருக்குமென நினைக்கையில்
துளிர்க்கிறது
பெருமூச்சோடு
சிலசமயம் மகிழ்ச்சி.
-
கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்
கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.நிகழ் காலத்தில் ரயில்.
கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல
வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.உருவாகிறது
சோகத்தின் பெருமழை.
-

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்
அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.அது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து கொண்டிருந்த காலம். ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் இருந்தும் வறுமையில் இருந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்படி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தவர்களுக்கான அகதிகள் முகாம் இது. நசீர் பாக் முகாம் என்று அந்த இடத்திற்கு பெயர். நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக ஸ்டீவ் அங்கு வந்திருக்கிறார்.
அகதிகள் முகாமில் ஒரு டெண்டிற்குள் ஒரு தற்காலிக வகுப்பறையை உருவாக்கி இருந்தார்கள்.… …மேலும் வாசிக்க
