“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”
“கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“இருக்கிறேன்.”
“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”
“கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“இருக்கிறேன்.”
அது ஒரு விளையாட்டு.
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.
கண்களோடு கண்கள் கோர்க்கப்படும் போது
அங்கு கவிழ்கிறது ஒரு பேரமைதி.
ஒரு கணம் தான் எனினும்
அது ஒரு சலனமற்ற அகண்ட நீர்ப்பரப்பு.
முதல் கல் விழுவதற்கு முன் வென்றாக வேண்டும்.
இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
நடுவில் நெருப்பு வளர்த்து
பெருகுது சத்தம்!
யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
தீக்குண்டத்தில்!
நடுங்கி நிற்கிறேன் நான்
கூட்டதிற்கு வெளியே!