Month: March 2011

  • wikileaks2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள்.

    2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்கு பயணப்பட்டார். வன்னியில் போர்முனையில் நடந்த மனித உரிமை மீறல் செயல்களை பற்றிய கவலைகளை தெரிவிக்க நடந்த பயணம் என்று சொல்லபட்டாலும் இந்த பயணத்தின் போது முகர்ஜி விடுதலைப்புலிகளுக்கான எதிரான போரினை நிறுத்தும்படி கோரவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

    “போர் வெற்றி 23 ஆண்டுக்கால பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதோடு இலங்கை முழுவதும் குறிப்பாக வட இலங்கைக்கும் புதிய அரசியல் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் என நான் நம்பிக்கை தெரிவித்தேன். ராஜபக்சே தன்னுடைய நோக்கமும் அது தான் என்று உறுதியளித்தார்,” என்று முகர்ஜி சொன்னதாக விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள் சொல்கின்றன.… …மேலும் வாசிக்க


  • விக்கிலீக்ஸில் சென்னை தூதரக அதிகாரியின் குறிப்புகள்wikileaks
    அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.

    ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
    கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.

    2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
    நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.

    நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
    வெண் கண்ணாடியுமாய்
    அவன் அழகானவனாய் இருந்தான்.

    முகத்தில் சிறிது தாடி.
    விரல்களுக்கிடையே சிகரெட்.
    புன்னகைக்கும் போது கனிவும்
    எப்போதும் யோசனையுமாய் இருந்தான்.

    தினமும் என் முதுகில்
    அவனது பார்வையை உணர்ந்தவாறே
    எனது நாட்களை கடத்த தொடங்கினேன்.

    என்றாவது ஒரு நாள் அவன் கைகளால்
    எனக்கு மரணம் சம்பவிக்கும் என கற்பனை செய்ய தொடங்கினேன்.
    அந்த தருணங்களை கற்பனை செய்து
    என்னை நானே தயார் செய்து கொண்டே இருந்தேன்.

    ஒவ்வொரு நாளும்
    அவன் கண்களில் கோபம் அதிகரித்தபடி இருந்தது.
    என்னை கொல்வதற்கு முன்
    கோபத்திற்கான காரணமாவது அவன் சொல்வானா?


  • பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
    சேதங்களுக்கு இடையே
    உடைந்த கால்களாலான கட்டிலில்
    படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.

    கையில் ரத்தக்கறையோடு
    தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்.

    காகங்களின் கரைச்சலில்
    மறைந்து போயிருக்கின்றன
    தூரத்து ஒலி.
    சாம்பலை அள்ளி தெளிக்கிறது
    திடீர் காற்று.
    சாம்பலின் துகள்பட்டு
    நிறம் மாற யத்தனிக்கிறது
    பாட்டரி பெட்டியில் இருக்கும் குடிநீர்.

    குந்தி அமர்ந்திருப்பவன்
    கால்களை வலியோடு தடவி கொள்கிறான்.

    வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்களோடு
    கலந்து கொண்டிருக்கும்
    சிறுமி புன்னகைக்கிறாள்.
    இரவு நெருங்கி கொண்டிருக்கிறது.

    நன்றி
    தலைப்பு: சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம்


  • அவளிடம்
    அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
    அவள் கை கொடுத்து பிறகு
    விடைபெற்று
    விலகி நடந்தாள் பதற்றத்தோடு.

    மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
    தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
    குழம்பி போன மனநிலையோடு அவன்.

    எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
    முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
    அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.

    அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.

    அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
    பார்க்க கூடாது என நினைக்கிறான்.
    இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
    நீரினுள் படகு போல நடந்தாள்.
    ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
    அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.

    போனில் மனைவியாய் பேசுபவள்
    இன்று
    தூரத்தில் சென்று மறையும் வரை
    திரும்பியே பார்க்கவில்லை.