Month: April 2010

  • பழிக்கு பழி!

    என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது. அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.

  • ஐபிஎல் – ஆல் அவுட்!

    சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும்.

  • எந்திரத்தினுள் அவர்கள்

    இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும். நேரம் கடந்து விட்டது. காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும் நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது.

  • எதற்காக பதிவிட வேண்டும்? அவசியமா?

    வலைப்பதிவர்கள் தனி மனித தேடல் கொண்டவர்களாய், தன்னுள்ளே தேடுபவர்களாய் இருக்கிறார்கள். அதோடு அவர்களது எழுத்து அவர்களால் மட்டுமே தணிக்கை செய்யபடுகிறது. (உள் மனதின் தணிக்கை வேறு எந்த சர்வதிகார சென்சார் மீடியாவை விட கடுமையானது.) என்றாலும் வலைப்பதிவில் எழுதபடுவதை மற்ற ஊடகங்களில் உள்ளது போல வேறொரு கை எடிட் செய்வதில்லை. எழுதி முடித்தவுடனே பதித்து விட முடிகிறது. இதன் காரணமாய் மனித மனத்தின் யதார்த்தம் வேறு எங்கும் வெளியில் தெரிவதை விட வலைப்பதிவுகளில் அதிகமாய் தெரிகிறது. மனித…

  • தமிழ் வலைப்பதிவுலகம்

    கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில் தங்கள் வலைப்பதிவினை கை கழுவி போனாலும் நிறைய…

  • அவன் கைதான மறுநாள்

    சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன். தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  • எங்களுக்கு கல்வி வேண்டாம்

    எங்களுக்கு கல்வி வேண்டாம். எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம். பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம். குழந்தைகளை தனியாக விடுங்கள். ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள். எல்லாமே சரியாக தான் இருக்கிறது. சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது. நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான். – பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர் கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை…