Month: March 2009

  • இடுகாட்டிலும் சாதியா?

    “…நமது அரசியலைப்பு உருவாகி அறுபது வருடங்களாகி விட்டன. தீண்டாமை இன்னும் அழிந்தபாடில்லை…” – நீதிபதி பி.கே.மிஸ்ரா & நீதிபதி ஜெயசந்திரன், உயர்நீதிமன்றம். மேற்சொன்ன வார்த்தைகள் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகளால் சொல்லபட்டவை. என்ன வழக்கு அது? திருச்சி அருகே மணப்பாறை தாலுக்காவில் உள்ள சம்பட்டி பஞ்சாய்த்து இடுகாட்டில் தலித் உடலை புதைக்க அனுமதி மறுத்தனர் சாதி இந்துக்கள். இது நடந்தது டிசம்பர் 2008இல். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லா உயர் அதிகாரிகளும் அங்கு…

  • மனிதர்கள் – சர்வர் சுந்தரம்

    வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை.

  • தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!

    வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.