Month: October 2008

  • இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் இன்று நேற்றல்ல அது அரை நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் ஒரு கொடூரம். இலங்கை அரசாங்கமே தலைமை தாங்கி நடத்தும் இந்த கொடூரத்திற்கு லட்சக்கணக்கில் தமிழர்கள் மடிந்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் இந்த தமிழின ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் பல காலமாக தெரிவித்து வருகிறார்கள். இந்த தமிழ் ஆதரவு போக்கில் ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. விடுதலைபுலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யபட்ட அமைப்பாக அறிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைபுலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, ஈழத்து தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் பற்றி கண்டன குரல்கள் எழுப்புபவர்கள் கூட ஓரம் கட்டப்பட்டார்கள். இதற்கு காரணங்கள் இரண்டு.

    காரணம் ஒன்று

    இந்திய அரசாங்கத்திற்கு எப்போதுமே தமிழக பிரிவினையாளர்கள் மீது ஓர் எச்சரிக்கை உணர்வு உண்டு. பஞ்சாப் போலவோ காஷ்மீர் போலவோ தமிழகமும் தனி நாடு கோரிக்கை எழுப்பும் அபாயம் உண்டு என்பதால் உளவுத்துறை, பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு பிஞ்சிலே களையும் முறையை கையாண்டு வந்தார்கள்.

    …மேலும் வாசிக்க

  • அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன.
    இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி
    துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

    கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள
    அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன.

    சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து
    உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன
    கண்ணீரை போல.

    ‘இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து
    காத்திருந்த தருணம் தான்,’ என உறைத்த போது
    விம்மியெழுந்த அவளது அழுகை
    மலைகளை தாண்டி அவனுக்கு எட்டியது.