369 வருடங்களுக்கு முன்பு 1639-ம் ஆண்டு மதராஸ்பட்டினம் என்கிற இடத்தில் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான உரிமையும் நிலமும் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கபட்டது. இந்த சம்பவமே இன்றைய சென்னை நகரம் உருவாக காரணமாக அமைந்தது என சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளான இன்று (22 ஆகஸ்ட்) மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒப்பந்தத்தில் மெட்ராஸ்பட்டினம் என்று இருந்தாலும், இன்றைக்கு மெட்ராஸ் மாநகரத்தை நாம் சென்னை என அரசு வழிகாட்டுதல்படி அழைக்கிறோம். அப்படியானால் இன்றைய தினம் மெட்ராஸ் தினம் என்று அழைக்கபட வேண்டுமா? சென்னை தினம் என்று அழைக்கபட வேண்டுமா? 369 வயதாகும் சென்னை அதற்கு முன்னரே பல்லவர் காலத்தில் துறைமுகமாக புகழ் பெற்றிருந்தது. மைலாப்பூர், திருவல்லிகேணி ஆகிய பகுதிகள் குமாஸ்தாக்களின் வருகைக்கு முன்னரே ஊர்களாக வளர்ந்திருந்தன. என்றாலும் ஆங்கிலேயரே இன்றைய சென்னைக்கு தொடக்கம் கொடுத்தார்கள் என நாம் நினைப்பது நியாயமா? சரி அப்படியே கருதி விழா எடுத்தாலும் போர்ச்சீகிய பெயரான மெட்ராஸ் பொருந்துமா?
Month: August 2008
-
… …மேலும் வாசிக்க
-
நீங்கள் எழுதும் வலைப்பதிவின் நோக்கம் என்ன?
தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர் ஒருவர் அதனை பத்திரிக்கைகளில் பதிக்கும் ஆர்வமில்லாமல் இருந்தார். அவர் இப்போது தனது கவிதைகளை அரங்கேற்றுவதற்கு வலைப்பதிவினை சிறந்த இடமாக இனம் கண்டு கொண்டிருக்கிறார். இப்படி பற்பல விஷயங்கள் பார்க்கிறோம்.
- வலைப்பதிவு என்றாலே journal மாதிரி தினசரி தனது கருத்துகளை நான்கு பாராக்களில் முடக்கி எழுத வேண்டும் என்கிற கருத்து சரியா? தவறா? அப்படி எழுதுபவர்கள் தான் வலைப்பதிவர் என்கிற சரியான இலக்கணத்திற்குள் வருவார்களா?
- வலைப்பதிவில் எழுதுபவை அன்றைக்கு படிக்க உகந்ததாக அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தால் அப்போது படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பதிவுகள் யாருக்கும் சுவாரஸ்யம் தராமல் அல்லவா போகும்.
-
எழுத்தாளனை துரத்தும் மரண பயம்
என் கவிதையின் கதாநாயகி
இன்று என் கனவில் வந்தாள்.
என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள்
என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
அழுவதற்கும் அவள் தயாராக இல்லை.
நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து
கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை
முதலில் அடையாளமே தெரியவில்லை.என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை.
கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.எனது குற்றவுணர்வை சொன்னேன்.
மன்னிப்பை கோரினேன்.
கருணை காட்ட அவள் தயாராக இல்லை.
என் வலது கையின் கட்டை விரலை மட்டும்
கடித்து எடுத்து கொண்டு
இரத்தம் வழியும் உதட்டில் புன்னகையோடு
மீண்டும் மறைந்து போனாள்.
-
முதல்வர் பதவிக்காக சிரஞ்சீவி நடத்தும் பிரம்மாண்ட யாகம்
கடந்த ஞாயிற்று கிழமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். சில மாதங்களாகவே ஆந்திராவில் எதிர்பார்க்கபட்ட விஷயம் என்றாலும், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலிலே முதலமைச்சர் ஆகுமளவு அவரது புகழ் இல்லையென்றாலும் தேர்தல் முடிவுகளில் அவரால் ஓரளவு தாக்கத்தை உண்டு செய்ய இயலும் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.
சிரஞ்சீவி எதற்காக அரசியலில் பிரவேசிக்கிறார்?
மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் அரசியலில் நுழைவதாக சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தன்னால் ஆந்திர அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
… …மேலும் வாசிக்கசிரஞ்சீவியை கவனித்து வரும் சிலருக்கு சிரஞ்சீவியின் அரசியல் ஆசைக்கு ஜோதிடமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் அறிவார்கள். நடிகர் சிரஞ்சீவிக்கு பல காலமாகவே கணிதம் மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு. அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் உருவான பிறகு அவர் மக்களது பிரச்சனைகளுக்காக நேரம் ஒதுக்கியதை விட ராமேஸ்வரத்தில், திருப்பதியில் ஹோமம், யாகம் என்று தான் அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என சொல்கிறார்கள் விமர்சகர்கள்.
-

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?
டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.… …மேலும் வாசிக்க
-
2 குழந்தைகள் – ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!
இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன.ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம். கருகலைப்பு செய்வதற்கான சட்டம் இந்தியாவில் இப்போது விவாத பொருளாகி இருக்கிறது. 20 வாரங்களுக்குள் அபார்ட் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அதற்கு பிறகு அபார்ஷன் செய்வதென்பது தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என சட்டம் பொருள் கொண்டுள்ளதால் இந்த நிலை. இந்த சட்டம் இயற்றபட்ட ஆண்டு 1971-ம் வருடம். இதற்கு பிறகான 35 வருடங்களில் மருத்துவத்துறை பெரியளவு முன்னேறி விட்டது. இன்று தாயாரின் உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் பிரசவ காலத்தின் எந்த சமயத்திலும் கருகலைப்பு செய்யும் திறன் மருத்துவத்திற்கு உண்டு. என்றாலும் சட்டம் இந்த வளர்ச்சியை கணக்கில் எடுத்து கொண்டு தன்னை மேம்படுத்தி கொள்ளவில்லை.… …மேலும் வாசிக்க
-
சுதந்திர நாட்டின் மனிதர்கள்
… …மேலும் வாசிக்கசென்னை அண்ணா நகர். ஷேர் ஆட்டோ ஒன்றில் இரு பெண்மணிகள் பல காலம் கழித்து சந்திக்கிறார்கள். இருவருமே மத்தியவர்க்கத்தினர். வயதான பெண்மணி ஆஸ்திரேலியாவில் டாக்டருக்குப் படிக்கும் தனது மகளைப் பற்றி பேசி கொண்டு வருகிறார்.
“அவ பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் போது இரண்டு தடவையும் நான் இரண்டு மாசம் லீவு எடுத்து வீட்டுலயே இருந்தேன். அவளுக்கு சூப்புன்னா அவ்வளவு இன்ட்ரெஸ்ட். ஒரு அண்டா நிறைய சூப் கொடுத்தா கூட குடிச்சிடுவா. அவ அப்பவே சொன்னா என் படிப்பிற்காக நீங்க அஞ்சு காசு கூட செலவழிக்க கூடாதுன்னு. அதே மாதிரி அவ படிப்பு முழுக்க மெரீட்ல தான் வந்தா. அப்படியிருந்தும் ஆஸ்திரேலியாவுல படிக்க இது வரைக்கும் பத்து லட்சம் செலவாயிடுச்சு. அவங்க அப்பா என்னென்ன ஷேவிங்க்ஸ் வைச்சிருக்கிறாருன்னு எனக்கு தெரியாது. ஆனா என் பணமெல்லாம் உனக்கு தான்டான்னு அவ பனிரெண்டாவது முடிச்சவுடனே பத்து லட்சத்தை எடுத்து வைச்சிட்டாரு. ஆமா, உன் பையன் கூட இப்ப பனிரெண்டாவது படிக்கிறான் தானே?”
-
நகராமல் நிற்கிறது காலம்
துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.
செவி தன் திறனை இழந்து விட்டது.
கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன.
ஒளியை கிளப்பி போவதும்
தரையில் பட்டு சிதறுவதும்
எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!
யார் யார் சாக போகிறார்கள்?
நானில்லை.
நானில்லை.
காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன்.
கண்கள் இருளும் போது தான்
ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
ஆனால் வலியே இல்லை.
இறந்து விட்டேனா?
-
நினைவலைகள்
பாதி சொம்பு அரிசி எடுக்க
அடுக்கி வைத்த மூட்டைகளில்
மேல் மூட்டையை பிரிக்கவும்
கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.




