Month: June 2008

  • பயத்தின் நிழல் படிந்த கணம்

    உடலில் இன்னும் அவனது கை விரல் மேய்ந்து கொண்டிருப்பதாய் தவிப்பிருந்தது. இன்று அவனது பிடி உறுதியாக இருந்தது.

  • அழகு அவர்களது சாபம்

    கூட்டத்தின் வியர்வை வாசத்தில், புரியாத பாஷை கூச்சல்களில் யார் செவிக்கும் கேட்காத வசனங்கள் காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.

  • மனிதர்கள் – காதலால் பித்தன் ஆனான்

    கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன். அமைதியானவன். யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். எங்கள் கல்லூரி தங்கும் விடுதியில் அவரவர்களுக்கு தனி தனி அறை ஒதுக்கபட்டிருந்தது. பீடி குடித்தபடி அறைக்குள்ளே கிடப்பான். எக்கசக்க புத்தகங்கள் குப்பை போல அறையில் குவிந்திருக்கும். அறையே ஒரு பெரிய குப்பை கூடை போல தானிருக்கும். அந்த குப்பை கூடையில் ஒரு குப்பை போல கட்டில் தெரியும். கட்டிலில் ஒரு பழைய அழுக்கு மெத்தையை சுருட்டி அதை தனக்கான…

  • நிலத்தின் மீதான ஆசை – மத்திய வர்க்கம் உண்டாக்கும் மனிதர்களற்ற நகரங்கள்!

    அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன. ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள்.

  • மனிதர்கள் – சினிமாவில் தொலைந்தவன்

    ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்த சினிமா டைரக்டரை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனை பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம்…

  • மனிதர்கள் – நான் கடவுள்

    சில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளை கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும்…

  • மது வாடையடிக்கும் மாலை பொழுதில்

    எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள் கலைக்கபட்ட ஓவியங்களை நான் சீராக்கி வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.

  • மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி

    பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களை சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்கு பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்த சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையை சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களை கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தை கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கபட்டவர்கள்…

  • பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் – புது தகவல்கள்

    நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உருவானது? அதற்கு முன் என்ன இருந்தது? தொடக்கத்திற்கு முன் எதாவது இருந்ததா? ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிரபஞ்சம் உருவானதா? ஒன்றுமில்லாத நிலை என்று ஒன்றுண்டா? இப்படி பல கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இதற்கெல்லாம் அறிவியல் பதில் கண்டு பிடித்து விட்டதா என்றால் இல்லை. ஆனால் இப்படியாக இருக்கலாம் என சில அறிவியல் தத்துவங்கள் உண்டு. அத்தகைய அறிவியல் தத்துவங்களில் சமீப காலத்தில் புது புரட்சி ஒன்று நடந்திருக்கிறது.

  • மனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்

    சில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய தமிழ் பெண்ணை பார்த்தவுடன் காதல் பிறந்து விட்டது. அதற்கு பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்த பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரை பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்த பெண்ணையே மணந்து கொண்டார்.