பின்தொடர்வது என்றால் என்ன?
இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன ஆயிரமாயிரம் வலைத்தளங்கள். அப்படி எனில் இந்த கடலில் முத்தெடுப்பது தான் எப்படி? உதாரணத்திற்கு நீங்கள் இந்த வலைப்பதிவிற்கு வருகிறீர்கள், சிறிது நேர உலாவுதலுக்கு பிறகு இந்த எழுத்து உங்களுக்கு பிடித்து விட்டதென வைத்து கொள்வோம், என்ன செய்வீர்கள்? இந்த வலைப்பதிவின் முகவரியை நினைவில் வைத்து கொண்டு பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும் போது திரும்பவும் இங்கு வரலாம் என முடிவு செய்வீர்களா? மன்னிக்கவும்! இணையம் அந்தளவு கடினமானது அல்ல! இந்த வலைப்பதிவிற்கு வருகை தராமலே புது பதிவுகள் பதிவான கணத்திலே உங்களை தேடி வரும். எப்படி? மேலே படியுங்கள்!
மின்னஞ்சல்
இந்த வலைப்பதிவில் இடுகைகள் பதிக்கப்படும் வேகத்திலே அவற்றை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம். பிறகு பிடிக்கவில்லை என்றால் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் unsubscribe சுட்டி இருக்கும். அதை சுட்டினால் இந்த வலைப்பதிவில் இருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் பிறகு உங்களுக்கு வராது. இங்கு பதியப்படும் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை யாருக்கும் கொடுக்க மாட்டோம்.
ஓடைகள்
ஓடைகள்/RSS feeds என்பவை வலைப்பதிவுகள் உலகத்தின் மிக சாதுரியமான பிரச்சார தந்திரம். நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கு (ஜிமெயில், யாகூ, அவுட்லுக், தண்டர்பேர்ட் இன்னப்பிற) நம்மைத் தேடி மின்னஞ்சல்கள் வருகின்றன. நம்முடைய செல்பேசிக்குக் குறுஞ்செய்திகள் நம்மைத் தேடி வருகின்றன. அது போல RSS feedreader software நம்மிடம் இருந்தால், நாம் விரும்பும் இணையத்தள பதிவுகள் நம்மைத் தேடி வரும். RSS feedreader software-யினை உங்களது கணிப்பொறியில் இயங்க வைக்க தெரியவில்லையா! ஒன்றும் பிரச்சனையில்லை. ஜிமெயில் போல இணையத்திலே கூகுள் ரீடர் சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த செய்தி இணையத்தளங்கள் (BBC, NDTV போல), ஆங்கில வலைப்பதிவுகள் (zenhabits, seth போல), தமிழ் வலைப்பதிவுகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாசிக்க இயலும்.
மற்ற இடங்கள்