Category: கதைகள்
-
மனிதர்கள் – போதையே வாழ்க்கை
லீமா யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். நசுங்கிய மூக்கும் அந்நிய நிறமும் சென்னையில் அவனை இன்னும் அமைதியானவனாய் மாற்றி விட்டது. கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் மணிப்பூர் மாணவர்கள் வேறு சிலர் வேறு கல்லூரியில் படிப்பவர்கள் அவனை சந்திக்க அடிக்கடி வர தொடங்கினார்கள். கஞ்சாவும் சிகரெட்டும் மதுவும் தினசரி பழக்கங்களாயின.
-
மனிதர்கள் – பிரம்பு டீச்சரம்மா
பிரம்பு டீச்சரம்மாவை பற்றி நான் இரகசியமாக போலீசிற்கு கடிதங்கள் எழுத தொடங்கினேன். ஆனால் என் கடிதங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடிதம் எழுதியவரின் பெயர் இல்லை என்பதால் உதாசீனபடுத்தியிருப்பார்கள் என தோன்றியது. டீச்சரே தன்னை பற்றி புகார் எழுதுவதாய் கடிதம் எழுதினேன். அந்த ரகசிய கடிதங்களை பற்றி அறிந்த மற்றொரு நண்பன் என்னை இதன் காரணமாய் பல காலமாய் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தான். ஓரிரவு கனவில் பள்ளி மைதானத்தில் பிரம்பு டீச்சரை ஒரு ராட்சஸ கழுகு…
-
மனிதர்கள் – பாலைநிலத்து நிருபர்கள்
எதோ கேங்க் லீடர் போல ஊரிலிருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சூழ தான் உதவி ஆசிரியர் இருப்பார். நிறுவன வேறுபாட்டின்றி அந்த ஊரில் இருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது கட்டுபாட்டில் தான் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எந்த மன கசப்பும் இல்லாமல் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரே ஊரில் வசிக்கும் சொந்தக்காரர்கள் ஒருவருக்கொருவர் உரிமையோடு பேசி கொள்வது போலவும், ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அறிந்து வைத்திருப்பது போலவும் நிருபர்கள் குழு பழகியதை பார்த்தேன்.
-
பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை
கடற்கரையில் கதை பேசி அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அந்த அழகிய இளம் மனைவி உடலெல்லாம் தீ பற்றி எரிய கடலை நோக்கி ஓடுவதை பார்த்தார்கள்.