Month: June 2014

  • உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி

    உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி

    அது ஹிப்பிகளின் பொற்காலம். ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.

  • அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்

    தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.