என் வலைப்பதிவில் வெளியான மனிதர்கள் பதிவுகளைத் தொகுத்து தற்போது ரவிசங்கர் ‘மனிதர்கள்’ என்கிற பெயரில் இபுத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். நீங்கள் விரும்பிய பணத்தை கொடுத்தோ அல்லது இலவசமாகவோ இப்புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.
நான் அறிந்த உண்மை மனிதர்களை/சம்பவங்களை புனைவோடு கலந்து எழுதியது இந்த மனிதர்கள் தொடர் பதிவுகள். இங்கே ஒவ்வொரு பதிவாய் வெளியான போது நிறைய பேரை சென்றடைந்தது. தற்போது இபுத்தகமாய் அது மேலும் பல பேரை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி.
என்னுடைய எழுத்தினை மேலும் பல பேர் வாசிப்பார்கள் என்பதைத் தாண்டி இந்த இபுத்தக ரிலீஸ் ‘நூல் இனி’ மின்னூல் சந்தையின் இரண்டாவது இபுத்தக வெளியீடு என்பது மற்றொரு பெருமை. பதிப்பாளர்கள் தயவில்லாமல், பத்திரிக்கை ஆசிரியர்கள் தயவில்லாமல் நம்முடைய எழுத்து மற்றவர்களை சென்றடையாது என்கிற நிலை எப்படி இணையத்தின் மூலமாகவும் முக்கியமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் மாறியதோ அதற்கடுத்த முன்னேற்றம் நாமும் பெரும் நிறுவனங்களில் தயவில்லாமல் இபுத்தகங்களை வெளியிடலாம் என்பது தான். இதற்கான ஒரு முயற்சி ‘நூல் இனி.’ இது ஒரு தமிழ் மின்னூல்கள் சந்தை. வலைப்பதிவில் எழுதுபவர்கள், அச்சில் புத்தகங்கள் வெளியிட்டவர்கள், தங்களது படைப்புகளை இபுத்தகங்களாய் வெளியட விருப்பமுள்ளவர்கள் இந்த இபுத்தக சந்தையைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முயற்சியினை மேற்கொண்ட ரவிசங்கர் இணைய உலகில் நிறைய பேருக்கு தெரிந்தவர். மின்னூல்கள் சந்தைக்காக தினமும் பல மணி நேரங்கள் ஒதுக்கி உழைத்து வருகிறார். என்னுடைய இபுத்தகத்தை தன்னுடைய சந்தையில் வெளியிட்டது மட்டுமல்ல, இதற்கான பதிப்பாளரும் அவரும். மிக்க நன்றி ரவிசங்கர்.
- நீங்கள் மின்னூல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- தமிழில் மின்னூல்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா?
- தமிழ் மின்னூல்களை இணையத்தில் பணம் கட்டி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா?
உங்களது கருத்துகளை கீழே எழுதுங்கள்.
Leave a Reply