
மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு
தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும். ...தொடர்ந்து வாசிக்க ...

சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

சுனாமி பீதி – புகைப்படங்கள்
2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ...தொடர்ந்து வாசிக்க ...
அவனுள் அவனாகி
பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது
அவனது சோகம்.
விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.
தன்னுள் நுழைந்து தேடும் போது
தேடுபவனாய் மாறி போயிற்று. ...தொடர்ந்து வாசிக்க ...

உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்
எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல. ...தொடர்ந்து வாசிக்க ...

மனிதர்கள் – திருமணம் வேண்டாம்
முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது. ...தொடர்ந்து வாசிக்க ...