Year: 2009

  • உலகத்தில் பட்டினியால் பாதிக்கபட்ட மக்களில் 50% பேர் இந்தியர்கள்

    உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். மேலும் வாசிக்க

  • 3 லட்சம் தமிழ் மக்கள் கம்பி வேலிகளுக்கு இடையே சிறைபட்டு இருக்கிறார்கள்

      கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது. வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது.…

  • தற்கொலை மேம்பாலம்

    இது தற்கொலை மேம்பாலம். யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று தற்கொலை செய்து கொள்ளலாம்.

  • நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?

    ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

  • மனிதர்கள் – அவனுக்குள் கேட்கும் குரல்

    மனிதர்கள் – அவனுக்குள் கேட்கும் குரல்

    அன்று தொடங்கி இன்று ஏழு வருடங்களாகிறது. இன்று வரை தினமும் தனக்குள் நிரஞ்சனின் குரல் கேட்டபடி இருக்கிறது என அந்த கடிதம் முடிந்தது. எதாவது தட்டி கேட்டால் அந்த குரல் பயங்கரமாய் திட்டுகிறது. எப்படியாவது நிஜ நிரஞ்சனிடம் பேசி அவரை தனக்குள் இருந்து வெளியே போக வழி செய்து தர வேண்டுமென ஒரு வேண்டுகோளும் இருந்தது.

  • டைம் இதழ் சொல்கிறது – ஓபாமா ஈழ தமிழர்களை காக்க தவறி விட்டார்

    டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன். ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா? ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு முக்கிய விஷயம், தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் பயங்கரவாதிகளை…

  • உன்னை போலவே ஒருவன்

    அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில் ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன் எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.

  • விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்

    விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது. தேசியத்தின் எழுச்சி பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும்…

  • இந்த போரில் யாருக்கும் வெற்றியில்லை

    மாயஜால மந்திரவாதிகளும், சூன்யக்காரிகளும், வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும், தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்

  • வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?

    அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா?