துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.
செவி தன் திறனை இழந்து விட்டது.
கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன.
ஒளியை கிளப்பி போவதும்
தரையில் பட்டு சிதறுவதும்
எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!
யார் யார் சாக போகிறார்கள்?
நானில்லை.
நானில்லை.
காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன்.
கண்கள் இருளும் போது தான்
ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
ஆனால் வலியே இல்லை.
இறந்து விட்டேனா?
நகராமல் நிற்கிறது காலம்
Comments
3 responses to “நகராமல் நிற்கிறது காலம்”
-
நல்ல நடை உங்களுக்கு கவருகிரது தொடருங்கள் வாழ்த்துக்கள்
-
தோட்டாக்கள் வெடித்து>>கால்களை நோக்கி >ஒளியை கிளப்பி >தரையில் சிதறுவதும் >யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…! >யார் யார் சாக போகிறார்கள்? >நானில்லை. >நானில்லை. >காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல >சாதுரியமாக ஒதுங்கி >கண்கள் இருளும் போது வருந்துகிறேன். >ஆனால் >வலியே இல்லை. >இறந்து விட்டேனா?
-
வார்த்தகளை சிக்கனப்படுத்துங்கள்
Leave a Reply