விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா

2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

போர் குற்றங்களுக்காக இலங்கை அரசினை விசாரணை கூண்டில் நிறுத்த வேண்டும் – அருந்ததி ராய்

ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

…நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது.  லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை… தொடர்ந்து வாசியுங்கள்...

இலங்கை முகாம்களின் அவல நிலை – நேரடி சாட்சியங்கள்!

கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம்… தொடர்ந்து வாசியுங்கள்...

உலக நாடுகள் மூலம் இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் தொடங்கி விட்டன

ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர்.

நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

தனக்கு நேர்ந்தது போல பல தமிழர்களுக்கு இந்த பலவந்தமான வழியனுப்பு… தொடர்ந்து வாசியுங்கள்...

3 லட்சம் தமிழ் மக்கள் கம்பி வேலிகளுக்கு இடையே சிறைபட்டு இருக்கிறார்கள்

 

கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக

டைம் இதழ் சொல்கிறது – ஓபாமா ஈழ தமிழர்களை காக்க தவறி விட்டார்

டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன்.

ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?

ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு முக்கிய விஷயம், தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சீதோஷ்ண மாற்றம்… தொடர்ந்து வாசியுங்கள்...

விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்

விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.

தேசியத்தின் எழுச்சி

பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும்… தொடர்ந்து வாசியுங்கள்...

வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.

இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில்… தொடர்ந்து வாசியுங்கள்...

தமிழினி மெல்ல சாகும்

எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.

தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால்… தொடர்ந்து வாசியுங்கள்...

இலங்கை கிழக்கு மாகாணத்தில் கருணா படைகளால் மனித உரிமை மீறல் – பிரபல மனித உரிமை கழகம் பகிரங்கம்

உலகளவில் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW – Human Rights watch.) சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தைரியமாய் பகிரங்கபடுத்துவதில் இந்த தன்னார்வ நிறுவனம் பெயர் பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண அரசாங்கத்தை குற்றம் சாட்டி, அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவித்து இருக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தற்போது ராஜ பக்சே அரசின் கட்டுபாட்டில் உள்ளது. விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்குரிய போர்படை தளபதியாக இருந்த கருணா அம்மன்… தொடர்ந்து வாசியுங்கள்...