sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » வாழ்க்கை
மனிதர்கள் – திருமணம் வேண்டாம்

மனிதர்கள் – திருமணம் வேண்டாம்

Friday, April 6th, 2012 10:51 am · by Sai Ram · in கதைகள், மனிதர்கள்

முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது. தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

மனிதர்கள் – முசுடு கிழவி

மனிதர்கள் – முசுடு கிழவி

Friday, December 30th, 2011 8:37 pm · by Sai Ram · in கதைகள், மனிதர்கள்

பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். தொடர்ந்து வாசியுங்கள்...

புது வருடப் பிறப்பு – எதற்கு இந்த பரபரப்பு?

Wednesday, December 30th, 2009 7:55 pm · by Sai Ram · in கட்டுரைகள்

 சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில்… தொடர்ந்து வாசியுங்கள்...

அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் – ஆய்வு முடிவு

Sunday, December 28th, 2008 8:08 pm · by Sai Ram · in கட்டுரைகள்

நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு… தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்

மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்

Thursday, July 17th, 2008 1:47 pm · by Sai Ram · in மனிதர்கள்

அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது. தொடர்ந்து வாசியுங்கள்... | 7 Comments

நிலத்தின் மீதான ஆசை – மத்திய வர்க்கம் உண்டாக்கும் மனிதர்களற்ற நகரங்கள்!

Sunday, June 15th, 2008 2:42 pm · by Sai Ram · in கட்டுரைகள்

அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன. ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள். தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

ஜுன் 6 – இந்தியாவில் இன்று பெரும்பாலனோருக்கு பிறந்த நாள்

Friday, June 6th, 2008 10:56 pm · by Sai Ram · in கட்டுரைகள்

பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள். தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம்

Sunday, June 1st, 2008 8:17 pm · by Sai Ram · in கட்டுரைகள்

கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன். தொடர்ந்து வாசியுங்கள்... | 3 Comments

வெப் 2.0 & வாழ்க்கை 2.0

Wednesday, April 23rd, 2008 2:04 pm · by Sai Ram · in கட்டுரைகள்

இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.

கால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும்

தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (72)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (21)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (20)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.