sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » வலைப்பதிவு
வலைப்பதிவு தொடங்கிய நாளன்றே ஹேக்கிங். மீண்டது எப்படி!

வலைப்பதிவு தொடங்கிய நாளன்றே ஹேக்கிங். மீண்டது எப்படி!

Thursday, May 13th, 2010 10:43 am · by Sai Ram · in கட்டுரைகள்

இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது.

ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது… தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

இது புதிய வலைப்பதிவு

Wednesday, May 12th, 2010 10:41 pm · by Sai Ram · in கட்டுரைகள்

ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும். தொடர்ந்து வாசியுங்கள்... | 5 Comments

எதற்காக பதிவிட வேண்டும்? அவசியமா?

Monday, April 12th, 2010 5:38 pm · by Sai Ram · in கட்டுரைகள்

வலைப்பதிவர்கள் தனி மனித தேடல் கொண்டவர்களாய், தன்னுள்ளே தேடுபவர்களாய் இருக்கிறார்கள். அதோடு அவர்களது எழுத்து அவர்களால் மட்டுமே தணிக்கை செய்யபடுகிறது. (உள் மனதின் தணிக்கை வேறு எந்த சர்வதிகார சென்சார் மீடியாவை விட கடுமையானது.) என்றாலும் வலைப்பதிவில் எழுதபடுவதை மற்ற ஊடகங்களில் உள்ளது போல வேறொரு கை எடிட் செய்வதில்லை. எழுதி முடித்தவுடனே பதித்து விட முடிகிறது. இதன் காரணமாய் மனித மனத்தின் யதார்த்தம் வேறு எங்கும் வெளியில் தெரிவதை விட வலைப்பதிவுகளில் அதிகமாய் தெரிகிறது. மனித மனதை நாம் rawஆக இவ்வளவு அருகில் இருந்து பார்த்தில்லை என்பதே நமக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு காரணம். இவ்வளவு rawஆக எழுதுவதற்கு காரணமென்ன? அப்படி எதற்கு வலைப்பதிவிட வேண்டும்? அவசியமா? தொடர்ந்து வாசியுங்கள்... | 8 Comments

தமிழ் வலைப்பதிவுலகம்

Monday, April 12th, 2010 2:23 am · by Sai Ram · in கட்டுரைகள்

கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில்… தொடர்ந்து வாசியுங்கள்... | 6 Comments

எனக்கு தமிழ்மணம் கொடுத்த பதக்கம்

Monday, January 18th, 2010 6:17 am · by Sai Ram · in கட்டுரைகள்

 என்னுடைய பதிவு ஒன்று ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் உள்ள 16 பிரிவுகளில் உள்ள ஒரு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றதாகவும் அதனால் அந்த தளம் எனக்கு ஒரு பதக்கம் கொடுத்ததாகவும் அந்த பதக்கத்தை நான் என் வலைப்பதிவின் முகப்பில் மாட்டி வைத்திருப்பேன் என சில மாதங்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்திருக்கக் கூடும். எனக்கு விருது கிடைக்க போவுதா? நல்ல கதை! என்கிற மாதிரியான தன்னடக்கம் அல்ல. நான் ஒரு பரிசு பதக்கத்தை… தொடர்ந்து வாசியுங்கள்... | 5 Comments

ஒரு வருடமாகி விட்டது!

Monday, February 2nd, 2009 9:00 pm · by Sai Ram · in கட்டுரைகள்

ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க… தொடர்ந்து வாசியுங்கள்... | 6 Comments

நீங்கள் எழுதும் வலைப்பதிவின் நோக்கம் என்ன?

Thursday, August 21st, 2008 6:05 pm · by Sai Ram · in கட்டுரைகள்

தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர் ஒருவர் அதனை பத்திரிக்கைகளில் பதிக்கும் ஆர்வமில்லாமல் இருந்தார். அவர் இப்போது தனது கவிதைகளை அரங்கேற்றுவதற்கு வலைப்பதிவினை சிறந்த… தொடர்ந்து வாசியுங்கள்...

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?

Sunday, August 17th, 2008 10:08 pm · by Sai Ram · in கட்டுரைகள்

அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தொடர்ந்து வாசியுங்கள்... | 17 Comments

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (72)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (21)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (20)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.