
மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது
எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். தொடர்ந்து வாசியுங்கள்... | 6 Comments

பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை
இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ். தொடர்ந்து வாசியுங்கள்... | 5 Comments
எங்களுக்கு கல்வி வேண்டாம்
எங்களுக்கு கல்வி வேண்டாம்.
எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
குழந்தைகளை தனியாக விடுங்கள்.
ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.
பிச்சை போடாதே
இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான்
தலித்தை கொளுத்தினார்கள்
என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

மாநில சுயாட்சி நமக்கு தேவையா?
ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன. தொடர்ந்து வாசியுங்கள்... | 6 Comments
உத்தபுரமும் காம்ரேடுகளும்
இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.
உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.
சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்… தொடர்ந்து வாசியுங்கள்... | 4 Comments

உலகத்தில் பட்டினியால் பாதிக்கபட்ட மக்களில் 50% பேர் இந்தியர்கள்
உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். மேலும் வாசிக்க

வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?
அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா? தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

மனிதர்கள் – சர்வர் சுந்தரம்
வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை. தொடர்ந்து வாசியுங்கள்... | 12 Comments


