உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.… தொடர்ந்து வாசியுங்கள்...

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு. தொடர்ந்து வாசியுங்கள்...

பரமக்குடி, பள்ளிக்கூடம், வாகனத்தை கண்டாலே பயந்து ஓடும் கிராம மக்கள்

பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி எந்த படிநிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். தொடர்ந்து வாசியுங்கள்...

சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்...

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். தொடர்ந்து வாசியுங்கள்...

சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?

கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது. கிராமத்து ஊர் கவுண்டரின் உத்தரவின்பேரில் இந்த முள்வேலி கம்பி கட்டபட்டதாக சொல்லபடுகிறது. தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது

Featured

எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். தொடர்ந்து வாசியுங்கள்...

பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை

இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ். தொடர்ந்து வாசியுங்கள்...

எங்களுக்கு கல்வி வேண்டாம்

எங்களுக்கு கல்வி வேண்டாம்.
எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
குழந்தைகளை தனியாக விடுங்கள்.
ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.