sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » அரசியல்
கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

Tuesday, March 13th, 2012 11:17 am · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

Monday, October 17th, 2011 2:42 am · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு. தொடர்ந்து வாசியுங்கள்...

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

Tuesday, October 11th, 2011 4:21 pm · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

Thursday, September 15th, 2011 10:00 am · by Sai Ram · in கட்டுரைகள்

என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்... | 6 Comments

விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா

Thursday, March 17th, 2011 6:30 pm · by Sai Ram · in கட்டுரைகள்

2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள். தொடர்ந்து வாசியுங்கள்... | 3 Comments

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

Thursday, March 17th, 2011 1:41 pm · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். தொடர்ந்து வாசியுங்கள்...

பிச்சை போடாதே

Friday, March 12th, 2010 11:23 pm · by Sai Ram · in கட்டுரைகள்

இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான்

தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

மாநில சுயாட்சி நமக்கு தேவையா?

மாநில சுயாட்சி நமக்கு தேவையா?

Wednesday, September 16th, 2009 6:02 pm · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன. தொடர்ந்து வாசியுங்கள்... | 6 Comments

நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?

Saturday, May 16th, 2009 11:58 pm · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா? தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்

Sunday, April 26th, 2009 12:52 am · by Sai Ram · in கட்டுரைகள்

விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.

தேசியத்தின் எழுச்சி

பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும்… தொடர்ந்து வாசியுங்கள்... | 5 Comments

1 2 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (73)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (21)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (20)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.