sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Home » தேர்தல்
ஜனாதிபதி பதவி தேவையா?

ஜனாதிபதி பதவி தேவையா?

Wednesday, August 8th, 2012 12:50 am · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள்...

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

Monday, October 17th, 2011 2:42 am · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு. தொடர்ந்து வாசியுங்கள்...

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

Tuesday, October 11th, 2011 4:21 pm · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். தொடர்ந்து வாசியுங்கள்...

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

Thursday, March 17th, 2011 1:41 pm · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். தொடர்ந்து வாசியுங்கள்...

நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?

Saturday, May 16th, 2009 11:58 pm · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா? தொடர்ந்து வாசியுங்கள்...

வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?

வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?

Monday, April 20th, 2009 6:27 pm · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா? தொடர்ந்து வாசியுங்கள்...

வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?

Sunday, April 12th, 2009 11:16 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.

இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில்… தொடர்ந்து வாசியுங்கள்...

வலைப்பதிவில் தேடு

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது திருமணம் வேண்டாம்
நான் கடவுள் அவனுக்குள் கேட்கும் குரல்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

அந்தக் கண்கள் நிர்வாணப் பெண்
வெற்றி களிப்பில் ஒரு முத்தம் தியனன்மென்-சதுக்கம்

அறிமுகம்

சாய் ராம் என் பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய படைப்புகளைப் பதிக்கவும், நடப்பு செய்திகளைப் பற்றி விவாதிக்கவும், சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைப்பதிவு. மேலும் வாசிக்க...

பெரும்பிரிவுகளும் உட்பிரிவுகளும்

  • கவிதைகள் (110)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
    • இளமதியின் கவிதைகள் (1)
  • கதைகள் (24)
    • மனிதர்கள் (21)
    • சிறுகதைகள் (3)
  • கட்டுரைகள் (77)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (8)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)

பின்தொடர்

வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

உங்களுக்குச் சொந்த வலைப்பதிவு வேண்டுமா?

  • 750 ரூபாயில் இரண்டு ஜீபி வலையகம்
  • 600 ரூபாயில் .com வலை பெயர் பதிவு
  • எண்ணற்ற மின்னஞ்சல் முகவரிகள்
  • பிரபல Hostgator-யின் தொழில்நுட்ப உதவி
MILK HOST மூலம் வலைப்பின்னுங்கள்

Copyright © 2013 S.Sai Ram. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.