மனிதர்கள் – முசுடு கிழவி

பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது

Featured

எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி

பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், ‘உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,’ என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்த குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த சில வருடங்கள் வரவே இல்லை. என் குழந்தைகள் என்னவானார்கள் என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளிடம் ஹெலன் கேட்டால் யாரோ வெள்ளைக்கார குடும்பத்தில் தன் இரண்டு குழந்தைகளும் வளர்வதாய் தகவலும் சில சமயம் அந்த குடும்ப புகைப்படமும் கிடைக்கும். தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – அவனுக்குள் கேட்கும் குரல்

அன்று தொடங்கி இன்று ஏழு வருடங்களாகிறது. இன்று வரை தினமும் தனக்குள் நிரஞ்சனின் குரல் கேட்டபடி இருக்கிறது என அந்த கடிதம் முடிந்தது. எதாவது தட்டி கேட்டால் அந்த குரல் பயங்கரமாய் திட்டுகிறது. எப்படியாவது நிஜ நிரஞ்சனிடம் பேசி அவரை தனக்குள் இருந்து வெளியே போக வழி செய்து தர வேண்டுமென ஒரு வேண்டுகோளும் இருந்தது. தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – லேட்டாய் வந்த காமவுணர்வு

கணவருக்கு சந்தேகம் ஒரு மின்னல் கீற்றாய் மனதில் தோன்றியது. ஆனாலும் அதனை உடனே மறக்க விரும்பினார். காரணம் இருவருடைய வயது. இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனையா இது? ஆனால் சந்தேக பொறி தீப்பொறியை விட வலிமையானது. படுக்கையில் மனைவி நடந்து கொள்ளும் விதம் புதுவிதமாய் இருந்தது. திருமணமான சமயத்தில் படுக்கையை கண்டாலே மிரண்ட மனைவி பின் எப்போதும் படுக்கையறையில் அதீத ஆர்வத்துடன் இருந்தது இல்லை. இப்போது திடீரென சில நாட்களாய் ஏன் வெறி பிடித்தவள் போல் ஆகிறாள். தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – அதீத மோகம்

பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அவன் கெமிஸ்டரி பாடத்திற்காக ஒரு டீச்சரிடம் டியூசனுக்கு போயிருக்கிறான். டீச்சர் என்று சொன்னால் அது ஓர் இளம் பெண் தான். அந்த பெண்ணின் வீட்டில் தான் டீயூசன் கிளாஸ் நடந்து இருக்கிறது. அந்த பெண் இவன் மீது அதிக அக்கறை காட்டி இருக்கும் போல. அப்புறம் இவன் பிரச்சனைக்குரியவன் என புரிந்ததும் சற்றே விலகி இருக்கும் போல. அந்த பெண் தன்னை காமவயப்படுத்த திட்டமிட்டதாகவும் தான் சற்று தயங்கியதும் தன்னை பழிவாங்க வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் என்னிடம் சொன்னான் மைக்கேல். தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – வீடியோ கேம்ஸ் சுந்தரமூர்த்தி

நான் அவருடன் பேசி கொண்டிருந்த போது ஓர் ஆவலில் என் கை அவரது டிவிடிகளை அலசியது. எல்லாமே வீடியோ கேம்ஸ் டிவிடிக்கள். அப்போது தான் கவனித்தேன். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்காகவே அலங்கரிக்கபட்ட அறை இது. எல்லாம் புது மெஷின்கள். நவீன கேம்ஸ் வகையறாக்கள். இந்த அறுபது வயது ஆளா இந்த வீடியோ கேம்ஸினை விளையாட போகிறார்? அல்லது அது அவரது பேரன் (?) அறையா? தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – சர்வர் சுந்தரம்

வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை. தொடர்ந்து வாசியுங்கள்...

சுதந்திர நாட்டின் மனிதர்கள்

“இவன் இருக்கானே, பள்ளிக்கூடத்துல இருந்து பாதியில ஓடி வந்துட்டான். வயல்ல அப்பா கூட வேலை செய்யுடான்னா முடியாதுன்னு சொல்லிட்டு தறுதலையா திரியறான். சிகரெட், தண்ணீ எல்லாம் பழக்கமும் உண்டு. நம்ம ஊர்ல தான் தெரியுமே இராத்திரியாச்சுன்னா வயசானவங்கள்ல இருந்து எட்டாவது படிக்கிற பொடிசுங்க வரை அத்தனை ஆம்பிள்ளைகளும் சாராய கடை பக்கம் தான் நிப்பாங்க. இவங்க அம்மா பொறுத்து பொறுத்து பாத்துட்டு விட்டுட்டா. இப்பல்லாம் வீட்டுலயே ஃபிரெண்ட்ஸோட சாராயம் குடிக்கிறான்.” தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்

அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது. தொடர்ந்து வாசியுங்கள்...