இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி
வலைச்சரம் என்கிற வலைப்பதிவினை நீங்கள் அறிந்திருக்கலாம். வார வாரம் ஒரு வலைப்பதிவர் அதில் ஆசிரியர் பொறுப்பேற்று தனக்கு பிடித்த அல்லது தான் பரிந்துரைக்க நினைத்த வலைப்பதிவுகளை தொடர்ச்சியாக அந்த வாரம் முழுவதும் பதிவிட்டு அறிமுகப்படுத்துவார். அதில் இந்த வாரம் நான் ஆசிரியர் பொறுப்பேற்று பதிவுகள் எழுதி வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த போகிறேன். நேரம் இருக்கிறவர்கள் வலைச்சரத்தில் எனது பதிவுகளைப் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்...
XIII இரத்தப் படலம் காமிக்ஸ்
நீள மூக்கு ஸ்பைடர் மேன், ஆர்ச்சி ரோபோ, லக்கிலுக், மாடஸ்தி, இப்படியான காமிக்ஸ் உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்ட தொடர் தான் இரத்தப் படலம். தொடர்ந்து வாசியுங்கள்...
கசாப்பிற்குத் தூக்கு வேண்டாம்
குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும். தொடர்ந்து வாசியுங்கள்...
ஜனாதிபதி பதவி தேவையா?
ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள்...
சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...
சுனாமி பீதி – புகைப்படங்கள்
2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. தொடர்ந்து வாசியுங்கள்...
உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்
எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல. தொடர்ந்து வாசியுங்கள்...
பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்
இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...
உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண்
குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். தொடர்ந்து வாசியுங்கள்...
இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது?
அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்? தொடர்ந்து வாசியுங்கள்...








