sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » Sai Ram
மனிதர்கள் – நாத்திகன்

மனிதர்கள் – நாத்திகன்

Monday, March 19th, 2012 10:37 am · by Sai Ram · in கதைகள், மனிதர்கள்

நாங்கள் பழகிய அந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அவன் ஜெர்மனிய நாஜி படைகள் பற்றிய வரலாற்றினைத் தேடி தேடி படித்து கொண்டு இருந்தான். இந்தச் சரித்திரம் தவறாக எழுதப்பட்டு இருக்கலாம், இரண்டாம் உலகப் போரில் தோற்றதால் தான் ஹிட்லர் கொடுங்கோலானாய் சித்தரிக்கப்படுகிறான் என்பது அவனுடைய வாதம். ஒருவேளை போரில் வென்றிருந்தால் உண்மை சரித்திரம் வேறுவிதமாய் இருந்திருக்கும் என சொன்னான். தொடர்ந்து வாசியுங்கள்...

இலங்கையைக் குற்றம் சாட்டும் ஆம்னிஸ்டி முழு ரிப்போர்ட்

இலங்கையைக் குற்றம் சாட்டும் ஆம்னிஸ்டி முழு ரிப்போர்ட்

Sunday, March 18th, 2012 5:29 pm · by Sai Ram · in கட்டுரைகள்

இலங்கையில் இன்னும் அரசு உதவியோடு தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிராக தொடரும் கைது, கடத்தல், துன்புறுத்தல், கொலைகள் பற்றி 63 பக்க ‘locked away’ என்கிற ரிப்போர்ட்டினை ஆம்னிஸ்டி வெளியிட்டு இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்...

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில்

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில்

Tuesday, March 13th, 2012 4:57 pm · by Sai Ram · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்

வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தொடர்ந்து வாசியுங்கள்...

கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

Tuesday, March 13th, 2012 11:17 am · by Sai Ram · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

முதுமை

Tuesday, February 7th, 2012 9:06 pm · by Sai Ram · in கவிதைகள்

அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
எங்கள் இளமையை மீட்பதற்காக
அந்த வருகை.
மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம். தொடர்ந்து வாசியுங்கள்...

பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்

Wednesday, January 25th, 2012 12:58 am · by Sai Ram · in கட்டுரைகள்

இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து… தொடர்ந்து வாசியுங்கள்... | 3 Comments

யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை

Tuesday, January 24th, 2012 4:40 pm · by Sai Ram · in கவிதைகள்

முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம். தொடர்ந்து வாசியுங்கள்...

கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்

Tuesday, January 17th, 2012 6:43 pm · by Sai Ram · in கவிதைகள்

கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

Monday, January 2nd, 2012 9:43 am · by Sai Ram · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்

பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

மனிதர்கள் – முசுடு கிழவி

மனிதர்கள் – முசுடு கிழவி

Friday, December 30th, 2011 8:37 pm · by Sai Ram · in கதைகள், மனிதர்கள்

பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். தொடர்ந்து வாசியுங்கள்...

← Previous 1 2 3 … 19 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (73)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (22)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (21)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.