வருடங்கள் உருண்டோடி
தனிமையிலே முதியவர்கள் ஆனோம்.
முகத்தில் சுருக்கங்களுடன்
எத்தனையோ எத்தனை வருத்தங்கள்.
அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
எங்கள் இளமையை மீட்பதற்காக
அந்த வருகை.
மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.
அதுவரை சலனமற்ற நீர்பரப்பில் பிரதிபலிப்போம்
எங்கள் வருத்தங்களை.
Author Archives: Sai Ram
பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்
Aside
இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து… தொடர்ந்து வாசியுங்கள்...
யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை
முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம். தொடர்ந்து வாசியுங்கள்...
கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்
கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். தொடர்ந்து வாசியுங்கள்...
உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்
அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.… தொடர்ந்து வாசியுங்கள்...
மனிதர்கள் – முசுடு கிழவி
பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். தொடர்ந்து வாசியுங்கள்...
சுட்டி: சுப்ரமணிய சுவாமியை புரிந்து கொள்வது எப்படி?
Link
என்னுள் எங்கோ
ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
சமீபத்தில் தான் தோன்றியது. தொடர்ந்து வாசியுங்கள்...
இருத்தல்
“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”
“கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“இருக்கிறேன்.”
 … தொடர்ந்து வாசியுங்கள்...
வேட்டையாடு விளையாடு
அது ஒரு விளையாட்டு.
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது. தொடர்ந்து வாசியுங்கள்...