இருளினை தின்னும் வெளிச்சம்

வானத்தை போர்த்தி இருக்கிறது இருள்.
நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம்.
பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள்.
முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

ஒருவரது தலையில் இருந்து ஊற்றுகிறது வியர்வை.
இன்னொரு காரில் புலம்பியபடி இருக்கிறாள் ஓர் இளம்பெண்.
பைக்கில் கண்களை மூடியபடி காத்திருக்கிறான் ஒரு வழுக்கை இளைஞன்.

காத்திருத்தலின் வேதனையோடு கதறுகின்றன அவ்வபோது ஹாரன் சத்தம்.
நடைபாதையில் தனது பேரனோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஒரு கிழவி.
வாகனங்களுக்கு இடையே பாதையை உருவாக்கி கொண்டு சாலையை கடக்கிறாள் ஒருத்தி.

வானத்தை பார்த்தேன்.
ஒளிக்கற்றையை இழுத்தபடி கீழ் இறங்குகிறது ஓர் எரிகல்.


Comments
3 responses to “இருளினை தின்னும் வெளிச்சம்”
  1. […] This post was mentioned on Twitter by Sai Ram. Sai Ram said: Blog update: செவ்வாய்க்கிழமை கவிதை – இருளினை தின்னும் வெளிச்சம் http://tinyurl.com/37zl7lr […]

  2. இருளினை தின்னும் வெளிச்சம்…

    வானத்தை போர்த்தி இருக்கிறது இருள். நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம். பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள். முழுச் சுற்று போகாத சக்கரங்கள்….

  3. […] This post was mentioned on Twitter by Sai Ram. Sai Ram said: Blog update: செவ்வாய்க்கிழமை கவிதை – இருளினை தின்னும் வெளிச்சம் http://tinyurl.com/37zl7lr […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.