தலையில் பலத்த காயம்!
இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!
மற்றவர்கள் எல்லாம் எட்டி பார்த்து விட்டு சாலையில் விரைந்து மறைகிறார்கள்!
அவளுக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள்; இன்றைய பொழுதை வீணாக்காதே என்கிறது என் மனம்.
போவதா வேண்டாமா என கால்கள் தடுமாறுகின்றன.
வெள்ளை சட்டைகள் போர்த்திய சாலையையும்
சிகப்பு உதிரம் பரவும் நடைப்பாதையையும்
மாறி மாறி பார்க்கிறேன் நான்.
இதை கவிதையாக எழுதலாம் என்னும் போது புன்னகை ததும்புகிறது என்னுள்.
அதற்கு பிறகு கிழவி என்னவானாள் என்பது எனக்கு தெரியாது.
Year: 2010
-
-

வெக்கையுறவு
ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை.காமம் வழிந்தோடிய பிறகான
நிர்வாணம் மிகவும் அசௌகரியமானது.என் பின்னே அவனது பார்வையை உணர்ந்தபடி
குளியலறைக்கு ஓடுவேன்.
பிறகு இருவரும் அவசர அவசரமாய்
துணிகளை தரையிலிருந்து தேடி எடுப்போம்.அறை வெக்கை மிகுந்ததாய் மாறியிருக்கும்.
வெளியே சாலையில்
வாகனங்களின் ஹாரன் சத்தம் அதிகரித்திருக்கும்.
இவ்வளவு துணிகளா என ஆயாசத்தோடு
உடைகளை இருவரும் அணிந்து கொண்டிருக்கும் தருணத்தில்
படுக்கை உருகி
என் கால் இடையே ஓடி
கரைந்து போவதை வருத்தத்தோடு பார்த்து விட்டு
மீண்டும் உடைகளை அவசரமாய் அணிந்து கொண்டிருப்பேன்.
-
கணவனது சட்டை அணிந்திருக்கிறான்

அது பிரத்யேகமான வடிவமைப்பு அல்ல.
சந்தையில் எளிதாய் கிடைத்து விடுவதும் இல்லை.
ஆனாலும் அந்த சட்டையை ஓர் அன்னியன் அணிந்திருப்பது
ஆச்சரியம் தான்.அவனிடமிருந்த வியர்வை வாசனை
என்னுடைய கணவனது போலவே இல்லை.
என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது.
கூட்டத்தினூடாக அவனை நோக்கி நகர்கின்றன
என்னுடைய அத்தனை உணர்வுகளும்.ஓர் உதட்டுச்சுழிப்பில் என்னை உதாசீனப்படுத்துகிறான்.
அன்னியர்களாலான கடலலையில்
ஒவ்வொரு முறை அலை உயரும் போதும்
நான் கண்களால் இரங்குகிறேன்.அலை தாழும் போது அவன்
ஒரு முத்தம் மட்டும் கொடுத்து விட்டு
அந்த சுவையை அங்கேயே துடைத்து எறிந்து விட்டு
பறந்து போன பிறகு
மிச்சமிருக்கிறது
அவன் அணிந்திருந்த எனது கணவனின் சட்டை.
-
சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்

கறுப்பு எறும்புகள்.
முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல
சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
எறும்புகளைப் பார்ப்பதும்
பிறகு
அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
இன்று எனது கணவரின் பிறந்த நாள்.
இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான்
வழக்கம் போல ஒரு குழப்பம்.அவசரம்! எமர்ஜென்சி!
அலுவலக வெள்ளைப் பலகையை
எறும்புகள் மொய்த்திருப்பது போல இருக்கின்றன
அதில் எழுதப்பட்டிருக்கும்
என்னுடைய வேலைகள் மற்றும் கடமைகள்.கடவுள் இன்றும் லேட் தான்.
வந்தவர் மதியத்திற்கு மேல்
எங்கு போனார் என்று தெரியவில்லை.
செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது.
மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.கணவரிடம் என்ன பொய் சொல்வது என குழம்பியபடி அமர்ந்திருக்கிறேன்.
இன்னும் நானூறு வருடங்கள் உழைத்தாலும் கூட
இந்த மாத டார்க்கெட்டை
என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.முதுகு வலி!
நான் அமர்ந்திருக்கும் பத்தாவது மாடி அறையின்
ஜன்னலுக்கு வெளியே
ரோஜா செடிகள் போல
ஒரு பிரம்மாண்ட மரத்தின் உச்சி தெரிகிறது.… …மேலும் வாசிக்க
-
சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?
சாதி என்னும் சுவர்
உத்தபுரத்தில் தலித் மக்கள் தாங்கள் வசிக்குமிடம் அருகே வரக்கூடாது என சாதி இந்துகள் சுவர் எழுப்பி அதன் மேலே மின்சாரம் பாயும் கம்பிகளையும் வைத்தது 21-ம் நூற்றாண்டின் உச்சகட்ட அவலம். (சுட்டி: ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்) இந்த சுவரை இடித்த அரசாங்கம் கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட சாதி இந்துகளுக்கும் தலித் மக்களுக்கும் தனி தனி பள்ளிக்கூடம், தனி ரேஷன் கடை என புது தீண்டாமை பழக்கத்தினை உருவாக்கியது. காவல்துறையினரே தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து (கலவரத்தினை அடக்க என சொல்கிறார்கள்) டீவி, சாமான்கள் எல்லாம் உடைத்தார்கள். கலவரத்திற்கு காரணமானவர்கள் என கைது செய்யபட்டவர்களில் அப்போது பிரசவம் முடிந்து மூன்று நாளே ஆன ஒரு பெண், எழுபது வயது முதிய பெண் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். (சுட்டி: உத்தபுரமும் காம்ரேடுகளும்)
மற்றொரு உத்தபுரம்
கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது.… …மேலும் வாசிக்க
-

சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்
உலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.“கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.
“ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.
“சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான்.… …மேலும் வாசிக்க
-
ஆர்மி கேம்பில் இருந்து மூன்றாவது தெருவில் எனது வீடு
அவர்களில் பெரும்பாலனோருக்கு
என்னுடைய மகன் வயது தான் இருக்கும்.
அரும்பு மீசை,
பள்ளிக்கூடத்து சிரிப்பு,
கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம்,
தூக்கமில்லாத கண்கள் மற்றும்
இனம் புரியா கோபம்.
அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.அன்றொரு நாள் கனவில்
இவர்களை நானே பிரசவித்ததாய் உணர்ந்தேன்.
எதிரி கொடி பறக்கும் ஆர்மி கேப்பில்
அவ்வபோது எழும் ஆரவாரத்தில்
என்றோ இறந்து போன எனது மகனின் குரலும் சேர்ந்தே
எனக்கு கேட்கிறது.
எனது ஜன்னலில் இருந்து தெருவில் கடந்து போகும்
ஒவ்வொரு சிறுவனின் முகத்தையும்
உற்று நோக்கியபடி கழிகின்றன எனது பகற்பொழுதுகள்.
அந்த பேய் நிற பழுப்பு யூனிபார்மினை கழற்றி எறிந்தபிறகு
அவர்களது வலிமையான தோள்களில் சாய்ந்து கொள்ள துடிக்கும்
எனது மனம்.நாய் குட்டியை வருடுவது போல
அந்த துப்பாக்கி எமனை வருடியபடி இருப்பார்கள்.
மீசையை முறுக்குவது போல
அவ்வபோது அதை தோளில் சுமப்பதும்
பிறகு கழட்டுவதுமாக இருப்பார்கள்.
அந்த பூட்ஸ் காலில் ஒட்டியிருக்கும் மணல்
எங்கிருந்தெல்லாம் வந்திருக்கும் என யோசித்திருப்பேன்.… …மேலும் வாசிக்க
-
காந்தி வேண்டாம்! அகிம்சை வேண்டும்!
வன்முறை என்பது மனிதனோடு உடன் பிறந்ததாய் இருக்கிறது, பயத்தை போலவே.துணிச்சல் மிகுந்தவனிடம் ஒளிந்து இருக்கிறது அபரிதமான பயம். பயந்தவனாய் வாழ்பவனிடமும் பதுங்கி இருக்கிறது அளவிற்கு அதிகமான வன்மம்.
காட்டில் வாழும் மிருகங்களில் எது வாழ தகுதியுடையவையோ அவை வாழ்கின்றன. மற்றவை காணாமல் போகின்றன. அந்த மிருகங்களில் ஒருவன் மனிதன். அவனுடைய இரத்தத்தில் அந்த வனத்தின் நெடி இன்னும் இருக்கிறது.
மிருகங்கள் வாழும் காட்டிற்கும் மனிதர்கள் வாழும் நகரங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை நியதி இன்னும் அதே தான். தன்னில் வலியது பிழைக்கும். ஒரு சிறு திருத்தம். இங்கே வலிமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல.
காந்தி ஹிட்லருக்கு எதிராக அகிம்சை போராட்டம் நடத்தி இருந்தால் ஜெயித்து இருப்பாரா? காந்திக்கு முன்பு அகிம்சை போராட்டங்களே கிடையாதா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட முடியுமா? அப்படி காட்டியவர்கள் தான் எத்தனை பேர்?

உடலெங்கும் இரணங்களும், ஈக்கள் மொய்க்கும் புண்களும், சீழ் வழியும் உடலை தொட்டு சேவை செய்தவர் அன்னை தெரசா.… …மேலும் வாசிக்க
-
காதலின் துயரம் அழுகையல்ல அது கோபம்
மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை
வண்ணம் தீட்டும் மேகங்களிடம் பதுக்கி வைத்தாலும்
கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும்
வாங்கியும்
படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன்.வேண்டாம்.
காதலின் துயரம்
என் வாழ்வை போர்த்தி இருக்கிறது.
அது என் வாழ்க்கை.
அது இல்லாமல் என் வாழ்வில்லை.காதலின் துயரம் கோபம்.
ஒவ்வொர் இரவும்
கோபம் மட்டுமே.
-
எங்கெங்கும் கண்கள்
சாலையை கடந்து வீட்டிற்குள் நுழைந்து
கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி
கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை
பல கண்களாய்
அவன் கவனித்தபடி இருக்கிறான்.கண்களை மூடி
கற்பனையில்
வீட்டிற்கு வெளியில் ஓடி
அந்த இரகசிய செய்தியை அறிவிக்கிறேன் நான்.தூரத்தில் ஆரவாரம் கேட்டது.

