சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
“ஹேப்பி நியூ இயர்,” என்பது ஓர் இனிய கீதம் போல இளைஞர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தோடும் மது வாடையோடும் கடற்கரையை நிரப்பியிருக்கும். கடற்கரையை ஒட்டிய சாலையில் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் குடிக்கார இளைஞர்களால் பரபரத்து கொண்டிருக்கும். நிறைய போலீசார் குவிந்திருப்பார்கள்.… …மேலும் வாசிக்க





